மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்.மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
உலகளவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகளில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பெண்கள் தினப் பேரணி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண்கள் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்கள், சமுர்த்தி மாதர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நடத்தப்படவுள்ளது.
பிரதேச செயலக முன்றலில் இருந்து பெண்கள் தினப் பேரணி ஆரம்பமாகி காந்திப்பூங்கா, மணிக்கூட்டுக்கோபுரச் சந்தி ஊடாக அரசடிச் சந்தியை அடைந்து புகையிரத நிலையச் சந்தி ஊடாக மீண்டும் பிரதேச செயலகத்தினை வந்தடையும்.
அதனையடுத்து பகல் 2.30 மணிமுதல் டேர்பா மண்டபத்தில் பெண்கள் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெறும் நிகழ்வுகளில், அதிதிகளாக ஓய்வு பெற்ற மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, சட்டத்தரணியும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளருமான எஸ்.மங்களேஸ்வரி, விழுது மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திருமதி க.இந்துமதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்வில், பெண்களின் உரிமைகளை வெளிப்படுத்தும் நாடகங்கள், கலை நிகழ்வுகள், பாடல் , கவிதை, பேச்சுக்களுடன் பெண்கள் கௌரவிப்புகளும் இடம் பெறும்.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னுதாரணமாக மளிர்கின்ற உள்ளுராட்சி மன்றங்களில் பங்கு பெறும் பெண் உறுப்பினர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். என்பதுடன், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குள் உள்ள பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக் கடன்களுமு; வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச மகளிர் தினப் பேரணி, மற்றும் நிகழ்;வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment