தமிழ் பேசும் மக்களின் காணிப்பிரச்சனைகள் முஸ்லீம் அரசியல் வாதிகள் மற்றும் அரசதரப்புடன் பேசி உரிய தீர்வை பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன்.
தமிழ் பேசும் மக்களின் காணிப்பிரச்சனைகள் முஸ்லீம் அரசியல் வாதிகள் மற்றும் அரசதரப்புடன் பேசி உரிய தீர்வை பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு வடமாகாண முன்னால் முதலயமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தான்தேன்றிதனமாக செயற்ப்பட்டதாலும் அவர்கள் விரும்பியவற்றை செய்ய முன்வந்ததாலும் தான் புதிய அரசியல் கட்சி ஓன்று ஆரம்பிக்க வேண்டி வந்தது. மத்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் உதவியை நம்பாமல் எமது முயற்சியால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். மற்றும் அரசியல் தீர்வு வாழ்வாதாரம் பிரச்சனைகளுக்குரிய தீர்வு வழங்கப்படவில்லை. நாங்கள் விரும்பியதை விடுத்து அவர்கள் விரும்பியதை எமக்கு தர முன்வருகின்றனர். இதனால் தான் இந்த புதிய கட்சி உருவானது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சுயநலன் சார்ந்து செயற்பட்டதால்தான் கிழக்கில் இன்று காணி அபகரிப்புகள் சட்ட ரீதியற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை அனுபவம் வாய்ந்தவர்களின் அனுசரனையுடன் உரிய புள்ளிவிபரத்தின் அடிப்படையில் தீர்க்க சம்பந்தப்பட்ட தமிழ் பேசும் மக்களின் காணிப்பிரச்சனைகள் முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் அரசதரப்புடன் பேசி உரிய தீர்வை பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. என அவர் மேலும் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment