கொக்கட்டிச்சோலை கெட்வே ஆங்கிலக்கல்லூரியின் பரிசளிப்பு விழா.
கொக்கட்டிச்சோலை கெட்வே ஆங்கிலக்கல்லூரியின் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக் கிழமை (17) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கெட்வே நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நரேந்திரன் மோகரஞ்சிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கேம்பிறிஞ் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், கெட்வே நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, மாணவர்களினால் ஆங்கிலமொழியில் நடிக்கப்பட்ட நாடகங்களும், பாடலுக்கான அபிநயங்களும், உரையாடல்களும் மேடையேற்றப்பட்டன.
முதன்முறையாக கொக்கட்டிச்சோலை கெட்வே நிறுவனத்தினால், நிகழ்வுகளுடன் நடைபெற்ற பரிசளிப்பு விழா இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், உயர்தொழிநுட்பக்கல்லூரியின் பணிப்பாளர் ஜெயபாலன், மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம், பாடசாலைகளின் அதிபர்;கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment