மரக்கறி வகைகளை ஏற்றிவந்து கொண்டிருந்த லொறியொன்று குடைசாந்ய்ததில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேரைன ஆதார வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெலிக்கந்தைப் பகுதியில் திங்கட்கிழமை 04.03.2019 இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த லொறிச் சாரதி ஒருவர், உதவியாளர்கள் மூவர் என மொத்தமாக நால்வரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் என்று ஏறாவூர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
தம்புள்ளை மத்திய வியாபாரச் சந்தையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு ஏறாவூரை நோக்கி வரும்பொழுது லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
0 Comments:
Post a Comment