18 Mar 2019

நீதிக்கான பேரெழுச்சிக்கு அழைப்பு விடுத்து மட்டக்களப்பு மாவட்டமெங்கும் சுவரொட்டிகள்

SHARE
நீதிக்கான பேரெழுச்சிக்கு அழைப்பு விடுத்து மட்டக்களப்பு மாவட்டமெங்கும் சுவரொட்டிகள்
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கதவடைப்புப் போராட்டத்துக்கும் நீதிக்கான மபெரும் மக்கள் பேரெழுச்சிக்கு வருமாறும் அழைப்பு விடுத்து மட்டக்களப்பு மாவட்டமெங்கும் இரவோடிரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வரலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பு என்று இந்த சுவரொட்டிகள் உரிமை கோரப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை 19.03.2019 காலை 10 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து பேரெழுச்சி ஆரம்பமாகும் என்றும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரங்களிலும் பட்டிதொட்டிகளிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

“கால அவகாசம் வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும், விடயத்தை ஐக்கிய நாடகள் பொதுச் சபைக்குப் பாரப்படுதர்த வேண்டும், ஓ.எம்.பி (காணாமல் போனோருக்கான அலுவலகம் ) வேண்டாம் ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இப்போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: