மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தங்களை இலகுவாக பதிவு செய்வதற்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மடிக்கணினி கையளிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தங்களை இலகுவாக பதிவு செய்து கொள்ளும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனத்தின் நிதிஉதவியில் சிறுவர் அபிவிருத்தி நிதியம் நிறுவனத்தின் ஊடாக மடிக்கணனி வசதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
குறிப்பாக சிறுவர்களுக்கு ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், முன்கூட்டிய தரவுகளை பதிவு செய்வதற்கு இந்த மடிக்கணனிகளும் அதனுடன் இனைந்த இந்த உபகரண தொகுதிகளும் வழங்கப்பட்டன.
குறித்த இந்த அன்பளிப்பு மடிக்கணனிகளை குறித்த சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பு அரச அதிபர் மா.உதயகுமாரிடம் மாவட்ட செயலக அலுவலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (12) உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.
இந்நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அன்ட்ரூ லோரன்ஸ், சிறுவர் அபிவிருத்தி நிதிய நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் மன்சூர் அஹமட், சம்மேளன முகாமையாளர் ஆர்.அரியரட்ணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சியாத், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர் என்.குகதாசன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இவ்வாறு வழங்கப்பட்ட மடிக்கணனி தொகுதிகள் சுமார் 3 இலட்சம் பெறுமதியானதாகும்.

0 Comments:
Post a Comment