இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் முன்னாள் பிரதியமைச்சர் சோ. கணேசமூர்த்தி நியமனம்.
இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சோ. கணேசமூர்த்தி திங்கட்கிழமை 25.03.2019 தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட கணேசமூர்த்தி மட்டக்களபு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக செயற்படாமல் தூர்ந்து போய் இருக்கும் வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்;குவதன் மூலம் பிரதேசத்திலுள்ள பலருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும், அதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
கணேசமூர்த்தி தற்சமயம் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி பிரதம அமைப்பாளராகவும் இருந்து செயற்பட்டு வருகிறார்.
கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ, ஆகியோரின் அனுமதியுடன் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதத்தை கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சு அலுவலகத்தில் வைத்து கடந்த வாரம் வழங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment