திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் வைத்து, 1,500 மில்லிலீற்றர் கசிப்புடன், இரண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, நேற்றிரவு (07) கைது செய்துள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கசிப்பை அருந்துவதற்காக வீதியால் கொண்டு சென்று கொண்டிருப்பதாக, பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், அவர்களை சோதனைக்குட்படுத்திய போது, மேற்படி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜஜ்படுத்தவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment