தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவாக வவுனியா ஆர்வலரின் நாடு தழுவிய துவிச்சக்கரவண்டிச் சவாரி.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி வவுனியாவை சேர்ந்த சமூக ஆர்வலரான பிரதாபன் கடந்த 10.02.2019 அன்று ஆரம்பித்த நாடு தழுவிய துவிச்சக்கரவண்டிச் சவாரி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வந்தமாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்தை வந்தடைந்தது.
மலையக மக்களுக்கு ஆதரவு வழங்கும் ஆர்வலரை வரவேற்று வழியனுப்பும் நிகழ்வை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அப்பல்கலைக் கழகத்தின் பிரதான வாயிலின் பிரதான பாதையில் இருமருங்கிலும் நின்று செய்து முடித்தனர்.
இதனை ஒழுங்குகளை கிழக்குப் பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியம் மற்றும் அனைத்து பீடங்களின் மாணவர்கள் சார்பாக இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment