27 Feb 2019

கிணற்றிலிருந்தும் கடையொன்றிலிருந்தும் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்பு

SHARE
கிணற்றிலிருந்தும் கடையொன்றிலிருந்தும் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வெவ்வேறு இடங்களிலிருந்து ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை 27.02.2019 காலை 6 மணியளவில் மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், கந்தக்குட்டி நவரெட்ணம் (வயதுரு 49) என்பவர் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரம்மச்சாரியான இவர் தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும் சில சந்தர்ப்பங்களில் மன நிலைக் குழப்பத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டியுள்ள கடையொன்றிலிருந்து  அரசமணி தனூஷியன் (வயது 25) என்ற இளைஞன் இறந்துரு கிடந்த நிலையில் அவரது சடலத்தை ஏறாவூர் பொலிஸார் புதன்கிழமை மீட்டெடுத்து உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரும் ஆயித்தியமலைப் பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: