இடமாற்றம் பெற்றுச்செல்லும் இந்திய உதவித்தூதரக அதிகாரி டி.ஆர்.ரமேஷ் ஐயர் அவர்கள் மலையக மக்களுக்கு மகத்தான பணியாற்றியுள்ளார்.-இந்து சம்மேளனத் தலைவர்.- நாரா.டி.அருண்காந்த்.கொழும்பு இந்தியத் தூதரகத்திலும் கண்டி உதவி தூதரகத்திலும் சுமார் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பணியாற்றிய டி.ஆர்.ரமேஷ் ஐயர் அவர்கள் தமிழ் மக்களுக்கு சத்தமின்றி பெரும் சேவையாற்றியவர்.தமது சேவைக்காலப்பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக தூதரகத்தை நாடிய தூதரக அனுபவம் இல்லாத தமிழ் மக்களை சரியான முறையில் வழிநடத்தி அவர்களது தேவைகளை இடையூரின்றி பெற்றுக்கொடுத்தவராவார்.
இவ்வாறு உதவித்தூதரகத்தில் நடைபெற்ற டி.ஆர்.ரமேஷ் ஐயர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்கள் தெரிவித்தார்.நீண்டநேர கலந்துரையாடலுக்குப்பின் தூதரகத்திற்கு வெளியில்வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவித்தபோதே அருண்காந்த் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில் தெரிவித்ததாவது...
இலங்கை தொடர்பான உள்ளகப் பிரச்சினைகளில் பூரண நிபுணத்துவமும் அறிவும் கொண்ட ரமேஷ் ஐயர் அவர்கள் விசா,கடவுச்சீட்டு மற்றும் அது தொடர்பான செயற்பபாடுகளிலும் தமிழ் மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிவந்துள்ளார்.இவைகளுக்கப்பால் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு சட்டபூர்வமாக இரட்டை பிரஜா உரிமையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக மிகவும் விரிவான விளக்கங்களை வழங்கி அவற்றை பெற்றுக்கொள்வதற்கு ஊக்கப்படுத்தியதோடு தமது காலத்தில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரில் விருப்பமுள்ள அனைவருக்குமே ஏன் இரட்டை பிரஜா உரிமை வழங்கக்கூடாது என்பது தொடர்பான ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு வழங்கி தமது அன்பையும் அக்கரையையும் மலையக மக்கள் மீது வெளிப்படுத்தியிருந்தார்.நாடு முழுவதும் பரந்துபட்டு வாழும் இந்துக்களின் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விதமான விடயங்களில் இந்து சம்மேளனத்தின் கோரிக்கைகளையும் சிபாரிசுகளையும் உடனுக்குடன் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் எடுத்துச்சென்று பல சிக்கலான விடயங்களில் சத்தமின்றி எமக்கு உதவியவர் என்ற ரீதியில் இந்து சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்கள் தூதரகத்திற்கு விஐயம் செய்து டி.ஆர்.ரமேஷ் ஐயர் அவர்களைப் பாராட்டி இந்து சம்மேளனத்தின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு கலாச்சார நினைவுப் பரிசொன்றையும் வழங்கி கௌரவித்தார்.
ஊடகப்பிரிவு....இந்து சம்மேளனம்.இலங்கை.
0 Comments:
Post a Comment