11 Feb 2019

ஆங்கிலக் கல்வியில் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் மாணவர்கள் மிகக் குறைந்தவளாக தகுத்தியைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.

SHARE
ஆங்கிலக் கல்வியில் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் மாணவர்கள் மிகக் குறைந்தவளாக தகுத்தியைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.
ஆங்கிலக் கல்வியைப் பெறுத்தவரையில் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் மிகக் குறைந்தவளான தகுத்தியைத்தான் எமது மாணவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அதற்குக் காரணம் எமது வலயத்தில் அதிகளவு ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது, மாவர்கள் ஆங்கிலத்தை எவ்வாளவுதான் கற்றாலும் தேற்சியடையாத தன்மையும் காணப்படுகின்றன. மாணவர்கள் உயர்கல்வியைப் பெறும்போது இந்த ஆங்கில மொழி ஒரு தடையாக இருந்து வருகின்றது.

என மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். ஜிப்ஸ்(GIPS எனும் நிறுவனத்தினால் களுவாஞ்சிகுடியில் திங்கட்கிழமை (11) உயர் கல்வி தொழிற் பயிற்சி கற்கை நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உயர் கல்வி தொழிற் பயிற்சி கற்கை நிலையத்தைத் திறந்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர்…. கற்கின்ற மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என நினைக்கின்றார்கள். மாறாக பல்கலைக் கழகக் கல்வியை முடித்ததும் எவ்வாறு தொழிலைப் பெறுவது என்பது தொடர்பில் மறந்தவர்களாகவே கற்பதும், வழிகாட்டுவதுமாகத்தான் இருக்கின்றோம். பல பட்டதாரிகள் தொழிலற்றவர்களாக இருக்கின்றார்கள். இந்நிலையில் தொழில் சந்தையில் காணப்படுகின்ற தொழில் வாய்ப்புக்களுக்கு ஏற்ற பயிற்சிகளைப் பெற்றால் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு வாய்ப்புக்களாக இருக்கும். 

என்.வி.கியூ நான்காம் தரம் கற்று சித்தியெய்தால் கல்விப் பொதுத்தர உயர்தரம் சித்தியடைந்தவர்களாகவே மாணவர்கள் கருதப்படுகின்றார்கள். இதனை வைத்துக் கொண்டு தொழில் வாய்ப்புக்கள் பெறுவதற்கு இவ்வாறான நிறுவனத்தின் பங்களிப்புக்கள் அதிகளவு காணப்படும். இது எமது பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

ஆங்கிலக் கல்வியைப் பெறுத்தவரையில் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் மிகக் குறைந்தவளாக தகுத்தியைத்தான் எமது மாணவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அதற்குக் காரணம் எமது வலயத்தில் அதிகளவு ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது, மாவர்கள் ஆங்கிலத்ததை எவ்வாளவுதான் கற்றாலும் தேற்சியடையாத தன்மையும் காணப்படுகின்றது. மாணவர்கள் உயர் கல்வியைப் பெறும்போத இந்த ஆங்கில மொழி ஒரு தடையாக இருந்து வருகின்றாது. ஏன அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், தொழில் நிணைக்கள உதவி ஆணையாளர் ஆ.கோகுலன், களுவாஞசிகுடி ஆதார வைத்தியாசலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், பொறியியலாளர் கு.சென்தூரன், வங்கி முகாமையாளர் நா.சாந்தன், களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் க.மோகன், பட்டிருப்பு மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் க.நாகேந்திரன், ஜிப்ஸ் (GIPS நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியகர்கள், மாணவர்கள், பயிலுனர்கள், பெற்றோர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத் அந்த உயர் கல்வி தொழிற் பயிற்சி கற்கை நிலையத்தில், சுற்றுலா முகாமைத்துவம், ஆங்கிலம், வைத்தியசாலை முகாமைத்துவம், முன்பிள்ளைப் பருவ முகாமைத்துவம், கணணி தகவல் தொழில்நுட்பம்,  சுகாதார பராமரிப்பு, தாதியர் பயிற்சி, வர்த்தக முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிலையத்தில் பயிற்சியைப் பெற்றுத் தேறும் இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொழில்வாய்ப்புக்களை அந்நிறுவனத்தினர் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளனர். 

இதற்காகவேண்டி புலமைப் பரிசில் மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனனர் மேலதிக விபரங்களுக்கு 0765563323 எனும் இலகக்கத்தின் மூலம் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஜிப்ஸ் (GIPS நிறுவனத்தினர் இதன்போது தெரிவித்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: