பெண் அரசியல்வாதியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி காணொளிக் கமெராக்கள் 2 திருடப்பட்டதோடு ஒன்றுக்கு சேதம் விளைவிப்பு.
கல்லடி முதலாம் குறுக்கை அண்டி வசிக்கும் லோஜினி மகேந்திரா என்பவரின் வீட்டிலேயே திங்கட்கிழமை 07.01.2019 அதிகாலை 3.20 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டை நோட்டமிட்டபடி பிரதான நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த 3 சீசீரீவி கமெராக்களில் இரண்டு அகற்றப்பட்டிருப்பதாகவும் மேலும் ஒரு கமெரா இயங்க முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சேதமாக்கப்பட்ட கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அவதானித்த பொழுது குற்றச் செயல் புரிந்தவரின் நடமாட்டமும் தோற்றமும் தெரிவதாக அவர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.






0 Comments:
Post a Comment