29 Dec 2018

மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்வு.

SHARE
கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரபல்யமான மாகாணப் பாடசாலையாகத் திகழும், களுதாவளை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை அவர்களும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வே.மயில்வாகனம், பிரதம கணக்காளர் ச.நேசராசா, சூரியன் எப்.எம் இன் உதவி நிகழ்ச்சி முகாமையாளர் அ.நிசாந்தன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் இராஜாங்க கல்வி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களை அண்மையில் சந்தித்து  வேண்டுகோள் விடுத்ததற்கு அமைவாக 2019 ஆம் ஆண்டு களுதாவளை மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தி தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாக களுதாவளை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை தான் இராஜாங்க அமைச்சராக கடமையேற்றதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலும் அவர் உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என சகல துறைகளிலும் முன்னணியில் திகழ்கின்ற ஒரு 1ஏ.பி. தரத்தில் உள்ள இப்பாடசாலையானது, இங்கு காணப்படும் பௌதீக வளப்பற்றாக்குறை காரணமாக இன்னும் பல சாதனை புரிவதற்கு தடையாக இருந்து வருகின்றது. இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதன் மூலம் இவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என களுதாவளை கல்விச் சமூகத்தினர் எதிர்பார்ப்பதோடு, இராஜாங்க கல்வி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் இப்பணிக்கு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் என்றும் துணைநிற்பார் எனவும் மேற்படி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: