தென்கிழக்கு அராபியக் கடலில் உருவாகியுள்ள தாளமுக்கமானது இலங்கையை விட்டு நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமார் ஞாயிற்றுக் கிழமை (07) தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..
கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவி வந்த மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் அனேகமான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். தெற்கு, மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதோடு, கிழக்கு வடமேற்கு மற்றும், வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும், மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் சற்று பலமான காற்று வீசக்கூடும். இந்த இடியுடன் கூடிய மழை காலத்தில் காற்றும் சற்றுப் பலமாக வீசும் எனவே பொது மக்கள் இடி மின்னல் தாக்கத்திலிருந்து வரும் சேதங்களிலிருந்த குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமதறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
கடற் பிராந்தியங்களைப் பெறுத்தவரையில் தென்கிழக்கு அராபியக் கடலில் உருவாகியுள்ள தாளமுக்கமானது தங்போது இலங்கையிலிருந்து 1500 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலத்தில் சூறாவெளியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு சூறாவெளியாக உருவாகும் பட்சத்தில் ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட லுவான் என்ற பெயர் அதற்குச் சூட்டப்படும். இது தற்போது வடமேற்குத் திசையில் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதன் காரணத்தினால் மன்னார் முதல், புத்தளம், கொழும்பு, காலி ஊடான ஹம்பாந்தோட்டை முலான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வரை வீசுவதனால் அந்தக் கடல் பிராந்தியங்கள் கொந்தழிப்பாகவும், இடியுடன்கூடிய மழையும் அந்த பிராந்தியங்களில் காணப்படும்.
எனவே மீனவ சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள், தமது கடல் நடவடிக்கைகளின்போதும் அவதானம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். ஏனைய கடல் பிராந்தியங்களில் இந்த இடியுடன் கூடிய மழை காயப்படும் சந்தர்ப்பங்களில், கடல் சற்றுக் கொந்தழிப்பாகவும் காணப்படும். என மட்டக்களப்பு நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமார் மேலும் தெரிவித்தார்.


0 Comments:
Post a Comment