ஆசிரியர் பணியில் 15 வருடங்களாக மகத்தான சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற புத்திரசிகாமனி சிறிக்காந் அவர்களுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற உயரிய விருதான “ஆசிரியர் பிரதிபா பிரபா விருது” இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளது.
இவ் ஆசிரியர் கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள நவபொலட்டகம தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் நியமனம் பெற்று ஐந்து வருடங்கள் சேவையாற்றி பின் தனது பிறப்பிடமான மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 10 வருடங்களாக சேவையாற்றி வருகின்றார்.
இவர் மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவுக்கு பகுதித்தலைவராகவும் இருந்து பல பணிகளைச் செய்து கொண்டு வருகின்றார் அத்துடன் சித்திர பாடத்தில் க.பொ.த(சா/த) மற்றும் க.பொ.த(உ/த) பரீட்சைகளில் தொடர்ந்து மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களை 100 வீதம் சித்தியடையச்செய்து அச்சமூகத்தின் விருத்திக்கு பங்களிப்பு செய்து கொண்டு வருகின்றார். இவரை மென்மேலும் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்று அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.


0 Comments:
Post a Comment