பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழிலை ஏற்படுத்தி கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்த நாம் தயார் தயாராக இருக்கின்றோம் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். செவ்வாய்க் கிழமை (04) மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்ட போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத் தலைவிகள் குழுவாக இணைந்து சிற்றுண்டிகள் மற்றும் உணவு வகைகள் செய்து விற்பனை செய்ய முன்வருவார்களானால் அவர்களை ஊக்குவிக்க எமது அமைப்பு தயாராகவே இருக்கின்றது. என்னிடம் பலர் ஆடைத்தொழிற்சாலை அல்லது வேறு தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரிக்கை வைக்கின்றனர். எமது அமைப்பினால் தற்போதைக்கு அது முடியாத காரியம்.
எதிர்வரும் காலங்களில் அதற்கு முயற்சிக்கின்றோம். மக்களுக்காக செய்யப்படுகின்ற உதவிகளுக்கான நிதி வெளிநாடுகளில் இருந்து பெறப்படுவதல்ல. இங்கு வருகின்ற இலாபங்களை வைத்தே இவ்வாறான தேவைகளை மக்களுக்கு நிறைவேற்றி கொண்டிருக்கின்றோம் எனவும்,
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உதவிகளை பெற்று அதனை துஷ்பிரயோகம் செய்யாமல் மற்றோருக்கு முன்னோடியாக விளங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment