புல்லுமலையில் உள்ள ஆலயத்திருவிழாவில் தீப்பந்தத்தில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாக பலத்த தீக்காயங்களிற்குள்ளாகி மருத்துவசெலவிற்கு நிதியின்றி தவிக்கும் இளைஞர் மகேந்திரலிங்கம்-தனுசனையும்,அவருடைய தாயாரையும் வைத்தியசாலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் வி.எஸ்.சுஜாந்த் சென்று பார்வையிட்டு தேவைகளை கேட்டுக்கொண்டார்.இதன்போது தனது சொந்த நிதியினையளித்து நோயாளிக்கு உதவிபுரிந்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் அம்பாறைமாவட்ட பாண்டிருப்பு கிளை அமைப்பாளர் இராஜன்-யோகநாதன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி இளைஞர் முன்னணியின் பொருளாளர் என்.டிருக்சன் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி இளைஞர் முன்னணியின் ஊடக விளையாட்டு துறை பொறுப்பாளர் எஸ்.ரகுதாஸ்,ஊடகவியலாளர், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களும் கலந்து கொண்டு நோயாளியை பார்வையிட்டு தங்களின் எதிர்பார்ப்புக்களையும்,குறைகளையும் பாதிப்புக்குள்ளான நபரிடம் கேட்கப்பட்டது.
இதன்போது காயமடைந்து வைத்திய சாலையில் இருக்கும் தனுசன் அவர்கள் தான் குணமடைவதற்குரிய மருந்துப் பொருட்களையும்,உணவுப்பொருட்களையும் கொள்வனவு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.இதனை ஏற்றுக்கொண்ட தொகுதி அமைப்பாளர் வாங்கித்தருவதாக உறுதியளித்தார்.

0 Comments:
Post a Comment