27 Aug 2018

காட்டு யானையிலிருந்து பாதுகாக்கும் காவல் கடமையில் ஈடுபட்ட தொளிலாளி காட்டு யானை தாக்கியதில் பலி

SHARE
மட்டக்களப்பு பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் காட்டு யானையிலிருந்து பாதுகாக்கும் காவல் கடமையில் ஈடுபட்ட தொளிலாளி ஒருவர் பலியானதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்
சனிக்கிழமை 25.08.2018 இடம்பெற்ற இச்சம்பவத்தில் உறுகாமத்தில் வசிக்கும் ஜோதி ஜோட் (வயது 50) என்ற காவல் தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.

இவர் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை காட்டு யானையிலிருந்து பாதுகாக்கும் காவல் கடமையில் இருந்தபோது அவ்விடத்திற்கு வந்த காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளது.

தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் படுகாயமடைந்தவரை மீட்டு கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில்  அனுமதித்தபோதும் அவரைக் காப்பாற்ற முடியாமற்போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடற்கூறாய்வுப் பரிசோதனையின் பின்னர் சனிக்கிழமை மாலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: