கடந்த 17ஆம் திகதி மூடப்பட்ட சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் 27ஆம் திகதி திங்கட்கிழமை அதன் 3ம் தவணைக்காக ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டின் முஸ்லிம் பாடசாலைகளில் 2ஆம் தவணைக்கான விடுமுறை கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை 20ஆம் திகதிக்கு முன்னராகவே விடுமுறை வழங்கப்பட்டதினால் அதற்கு மாற்றீடாக செப்ரெம்பெர் 01ஆம் திகதி சனிக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் கற்றல் கற்பித்தல்கள் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment