நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்க வேண்டுமாயின் பொலிஸ் பொதுமக்கள் உறவு பலப்படுத்தப்பட்டு நெருக்கமடைய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மெண்டிஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை திங்கட்கிழமை (13.08.2018) நடைபெற்றது.
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி. நஸீர் தலைமையில் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இப்பரிசோதனை நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மெண்டிஸ் கலந்து கொண்டு ஆயுதங்களின் பராமரிப்பு, வாகனப் பயன்பாடு, பொலிஸாரின் சேம நலன்கள், குறித்தும் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
நிகழ்வின் பொலிஸார் மத்தியில் அங்கு உரையாற்றிய பொலிஸ் அவர் மேலும் தெரிவித்ததாவது, பொலிஸ் சேவையானது முன்னைய காலங்களைவிட தற்போது கிராமங்கள் நகரங்கள் என்று மக்கள் மத்தியில் சென்றுள்ளது. இதனால் அனைத்து மக்களுக்கும் உயர்வான சேவையினை வழங்கக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு மக்களுக்கும் பொலிஸாருக்கும் உள்ள தொடர்புகள் அதிகரித்து இடைவெளிகள் குறையும்போது நாட்டில் ஏற்படும் குற்றச்செயல்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் இலகுவில் தடுக்க முடியும். என்றார்.
அதனால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழவும் சட்டம் ஒழுங்கில் நம்பிக்கை வைக்கவும் வழியேற்படும் என்றார்.
0 Comments:
Post a Comment