களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை(31.7.2018)
அதிகாலை 3.15 மணியளவில் கோழிலொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.பெரி யகல்லாறு ஞானம் பிறிண்டஸ் கடைக்கு அருகாமையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் வாகனத்தில் பயணித்த எவருக்கும் சிறுகாயமும் ஏற்படவில்லை.
ஏறாவூரிலிருந்து இறைச்சி கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனைக்கு புறப்படுகையிலே விபத்து ஏற்பட்டுள்ளது.வாகனத்தை செலுத்திச் சென்ற வாகனச்சாரதியின் நித்திரை மயக்கத்தினாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.
இவ்விபத்தினால் கடைப்பகுதி,ஏயாடெல் கம்பனியின் விளம்பரப்பலகை,ஸ்ரீலங்கா ரெலிகொம் கம்பனியின் கம்பம்,மற்றும் வாகனத்தின் முன்பகுதி சேதமேற்பட்டுள்ளது.இது சம்பந்தமாக போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
0 Comments:
Post a Comment