மட்டக்களப்பு – பொலொன்னறுவை மின்னேரியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 26.08.2018 இடம்பெற்ற வீதி விபத்தி;ல் கதுறுவெல முஸ்லிம் கொலனி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலியானதாக மின்னேரி பொலிஸார் தெரிவித்தனர்.
ஹஜ் பெருநாள் கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலாவொன்றின் நிமித்தம் நுவரெலியா சென்று மீண்டும் தமது ஊர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் பொலொன்னறுவையை அண்மிக்கும்போது அவர்கள் பயணித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த மரங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கதுருவெல, முஸ்லிம் கொலனியைச் சேர்ந்த காமில் இன்ஷாப் (வயது 23) மற்றும் முஸ்தபா இம்ஷித் (வயது 23) ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தின்போது வேனில் பயணித்த 08 பேரில் இருவர் மரணித்த நிலையில் 06 பேர் காயங்களுக்குள்ளாகி பொலொன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மேலும் ஓரிருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மின்னேரி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





0 Comments:
Post a Comment