29 Jul 2018

விவசாய உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம்.

SHARE
விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (29) மட்டக்களப்பு மாவட்டம் தும்பங்கேணியில் அமைந்துள்ள பொதுக்கட்டடத்தில் இடம்பெற்றது. 
போரதீவுப்பற்றுப் பிரதேச சிவில் அமைப்பின் தலைவர் வ.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய நாட்டின் இயற்கை விவசாய அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர்.மனோகரன் கிருஸ்னா, தேசி இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.ஈஸ்வரராஜா, சிவில் அமைப்பின் செயலாளர் தெ.சிபவாதம், மற்றும் தும்பங்கேணிப்பகுதி விவசாயிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மீள்குடியேற்ற அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ள இத்திட்டத்தில், நல்லின் செவ்வாழை, மா, மாதுளை, அன்னாசி, கொய்யா, பப்பாசி, உள்ளிட்ட பலவிதமான பயிரினங்களை நட்டு அதிலிருந்து கிடைக்கும் விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக இலாபத்தை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பான விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டன. 

இப்பயிற்செய்கை தொடர்பான விளக்கங்களையும், இயற்கை முறையிலான உரவகைகளைப் பாவித்தல், வெளி நாடுகளுக்கு விளை பொருட்களை அதிக இலாபத்திற்கு ஏற்றுமதி செய்து வாழ்வாதாரத்தைப் பெருக்குதல், தொடர்பான பலவித விளக்கங்களை இந்திய நாட்டின் இயற்கை விவசாய அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர்.மனோகரன் கிருஸ்னா வழங்கினார்.

இலங்கையில் இப்பயிர் செய்கைத் திட்டம் பல இடங்களில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் இத்திட்டம் முதன் முதலில் இத்தும்பங்கேணிப் பிரதேசத்திலே ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Author: verified_user

0 Comments: