ராணமடு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான ஆகாரம் வளங்கும் நிகழ்வு ராணமடு பாலர் பாடசாலையின் ஆசிரியர் தலைமையில் வியாழக் கிழமை (14) ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன், முன்பள்ளி தொடர்பான போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கமல்ராஜ், கிராமசேவகர் மற்றும் ஆசிரியரும் சமுக ஆர்வலருமாகிய மா.ஐPவரெத்தினம் விளையாட்டுக் களகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் எனபலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நலத்திட்டத்தின் நான்காவது பாடசாலை இதுவாகும், பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரித்து அதனூடாக கற்பதற்கு விருப்பத்தினையும் அதற்கான ஆரோக்கியத்தினையும் ஏற்படுத்தும் வகையில் நிக் அன்ட் நெல்லி அமைப்பினரின் நிதி அனுசரணையில் கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினரின் திட்டத்தில் ஒன்றாக பிரதேசசெயலகப் பிரிவினருடன் இணைந்து செயற்படுத்தும் ஒருவெற்றிகரமானதிட்டம் இதுவாகும்.
இந்த திட்டத்தில் மாணவர்கள் மாத்திரமல்லாமல் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வினையும், பெரியோர்களுக்கு பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த செயற்பாடாகவே இது கொண்டு நடாத்தப்படுகின்றது. என பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் இதன்போது தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
எமது பிரதேசங்களில் சிறுவர்களுக்கான கல்வி அவ்வளவாக கணக்கிலெடுக்கப் படுவதில்லை, ஆனால் அவர்களுக்கான கல்வி மிக மிக அத்தியாவசியமானதொன்று. அதனால்தான் “இளமையில் கல்விசிலையில் எழுத்து” என்றும் “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுஎன்றும்” சொல்லி இருக்கிறார்கள். வருங்காலத்தில் இந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் ஆற்றல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்” என அவர் இதன்போது தெரிவித்தார்.
“பிள்ளைகள் ஆரோக்கியமானஉணவுகளை மாத்திரம் உட்கொண்டால் அது போதுமானதல்ல, தவிரவும் நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதற்கு பெற்றோர்கள் தகுந்த செல்வாக்கினை நல்க முன்வர வேண்டும். பல கடினத்தின் மத்தியில் இந்த திட்டத்தினை நாம் இவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுத்துகின்றோம், அதைப் பயன்படுத்தி பிள்ளைகளை கல்வியிலும் ஆரோக்கியத்திலும் முன்னெடுத்துச் செல்லுவது உங்கள் கையிலேயே உள்ளது” என இதன்போது கமல்ராஜ் தெரிவித்தார்.
இச்செயற்திட்டம் பெற்றோரிடம் மாத்திரமின்றி ஊர் மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இத்திட்டம் இடைவிடாமல் நடைபெறுவதற்கு பெற்றோர், ஊர் மக்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறி, ஒழுங்கான முறையில் இதனைக் கொண்டு நடாத்துகின்றமைக்காக நெஞ்சார்ந்தநன்றியினையும் தெரிவித்து, இவ்வாறான திட்டம் பின்தங்கிய கிராமத்திற்கு வரப்பிரசாதம் என விதந்துரைத்தமை இந்தஏற்பாட்டுக் குழுவினருக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment