19 Jun 2018

பசுமையான சூழலை உருவாக்குவோம் எமது சூழலை நாமே பாதுகாப்போம்.

SHARE
சர்வதேசசுற்றாடால் தினத்தை முன்னிட்டு பசுமையான சூழலை உருவாக்குவோம்  எமது சூழலை நாமே பாதுகாப்போம் எனும் தொனிபொருளில்  முனைத்தீவு சக்திஉதவும் கரங்கள் அமைப்பினால் வீதியோர மரநடுகை செயற்பாடு சனிக்கிழமை (16) உதவும் கரங்கள் அமைப்பின் இணைப்பளர் தே.புவிதாஸ் தலைமையில் முனைத்தீவு ஆயுள்வேத வைத்தியசாலை முன்றலில் உள்ள வீதியோரங்களில் நடப்பட்டன. இந்நிகழ்வில் போரதீவுபற்று பிரதேச செயளாளர் ஆர்.ராகுலநாயகி, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் எஸ்.தணிகசீலன் சமூகவியல் மற்றும் சூழலியல் தொடர்பான ஆய்வாளரும் வளவருமான ஆகிய எஸ்.ரமேஸ்வரன், மற்றும் முனைத்தீவு கிராமசேவை உத்தியோகஸ்தர் ஆர்.பிரதீபன் மற்றும் முனைத்தீவு கிராம அபிவிருத்தி சங்கதலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இச்செயற்பாட்டின் ஊடாக பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு இது போன்ற செயற்பாடுகளில் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் எமது சுற்றுச் சூழலுக்கு முழுவதுமான பங்களிப்பினை நல்கவேண்டும் என பிரதேச செயலாளர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

இன்று உலகில் காணப்படும் காலநிலைமாற்றம் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தாமல் இல்லை, வருமுன் காப்போம் என்றகருத்தை முன்னிறுத்தி இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வினையும் இந்ததிட்டத்தின் கீழ் பொறுப்புணர்வையும் நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம். யுத்தம் அனர்த்தம் காரணமாகநாம் இழந்த மரங்களையும் சூழலையும் கட்டிக்காக்கும் தருணத்தில் இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் ஏனைய இளைஞர்களும் இவ்வாறான ஆளுக்கொருமரம் வளர்க்கும் திட்டத்தை மேற்கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இப்போன்ற செயற்பாடுகள் உதாரணமாக இருக்க வேண்டும். எனதணிகசீலன் தெரிவித்தார்.

நமதுமண்வளத்தை கட்டிக்காக்கும் ஒருபாரம்பரிய இயற்கைவழி மரம் நடுதல் எனவும் அவற்றைசிறுசிறு அளவிலாவது எமது பிரதேசங்களில் நட்டுஉருவாக்கவேண்டும் என எஸ்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: