8 Jun 2018

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை, மாவட்ட தகவல் வழங்கும் அதிகாரிகளுக்கான செயலமர்வு

SHARE
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள தகவல் வழங்கும் அதிகாரிகளுக்கான தகவல் உரிமைச் சட்டம் தொடர்பிலான அனுபவப் பகிர்வுசார் கலந்துரையாடல் செயலமர்வு வெள்ளிக்கிழமை (08) நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது. 
வெள்ளிக்கிழமை காலை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜயசுந்தரவின் தலைமையில் ஆரம்பமான இந்த செயலமர்வில் தகவல் உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ச ரணசிங்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஜகத் லியனாராய்ச்சி உள்ளிட்ட பலரும் பங்கு கெண்டனர்.

ஆரம்ப உரையினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் நிகழ்த்தினார். 
தகவல் உத்தியோகத்தர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்திருந்த இந்தச் செயலமர்வில், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள திணைக்களங்களில் தகவல் வழஙகும் அதிகாரிகளாகச் செயற்பட்டு வரும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். 

இச் செயலமர்வில், தகவலுக்கான உரிமைச்சட்டத்தினை அமுலாக்குவதில் உள்ள விடயங்கள், சட்டம் தொடர்பிலான சந்தேகங்களுக்கான விளக்கமளிப்புகள், உத்தியோகத்தர்களின் அனுபவங்கள் பகிரப்படுதல் மூலமான தெளிவுகளை வழங்குதல் போன்ற பகுதிகளில் தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. 

அத்துடன், தகவல்களின் வடிவம், தகவல்களைப் பரிமாறுதல், பதிவு முகாமைத்துவம், பொது அதிகாரசபைகளின் அதிகாரங்கள், தகவல்களை வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. 






SHARE

Author: verified_user

0 Comments: