16 May 2018

நிதி கிடைத்ததும் மட்டக்களப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட நகரங்களிலுள்ள இராணுவ முகாம்களும் அகற்றப்படும் - புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர்

SHARE
முக்கியமான நகரங்களில் இருக்கின்ற இராணுவத்தின் தலைமையஙகங்கள் அமைந்துள்ள 530 ஏக்கர் காணிகளின் விடுவிப்புக்காக தேவைப்படும் 820 மில்லியனுக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நிதி கிடைத்ததும் விடுவிக்கப்படவுள்ளன என்று புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற சிறைச்சாhலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கலாநிதி பொன்னையா சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் வசம் உள்ள காணிகளின் விடுவிப்பு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் திங்கட் கிழமை (14) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற சிறைச்சாhலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கலாநிதி பொன்னையா சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வரவேற்புரையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் நிகழ்த்தினார்.

இக் கூட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர், பாதுகாப்புப்படையினரின் வசம் உள்ள காணிகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன். அதிலுள்ள பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த  செயலாளர்,
மட்டக்களப்பு உட்பட மிக முக்கியமான தலைமையகங்கள் உட்பட இராணுவ முகாம்கள் இருக்கின்ற இடங்களில் அண்ணளவாக 530 ஏக்கர் காணி அதற்கு 820 மில்லியன் நிதி தேவைப்பட்டிருப்பதனால் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தயாரித்து அதற்கான நிதி கிடைத்தவுடன், மட்டக்களப்பு, கிளிநொச்சி போன்ற நகரங்களிலுள்ள தலைமை இராணுவ முகாம்களை அவர்களுக்கு ஏற்றவாறான இடங்களுக்கு இடம் மாற்றுவதற்கு தனியார் காணிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யுத்தம் முடிவடைந்த பின் 58000 ஏக்கர் காணிகள்  மொத்தமாக பாதுகாப்புப் படையினர் வசம் இருந்தது. அதில் 9896 அரசாங்கக்காணிகளையும், 18702 தனியார் காணிகளையும் மொத்தமாக 28599 ஏக்கர் காணிகளை இதுவரை இராணுவம் விடுவித்திருக்கிறது. மேலதிகமாக அரசாங்கக்காணிகளை உடனடியாக வெளியேறுவதற்கு வாய்ப்பில்லாத காரணத்தினால், இன்னும் தனியார் காணிகள் 7650 ஏக்கர் காணிகள் பாதுகாப்புத் தரப்பினர் கையில் இருக்கின்றன.

அவற்றில் தற்பொழுது எடுத்த நடவடிக்கைகளின் படி அண்ணளவாக 3000 அடையாளம் காணப்பட்டு அவற்றினை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2778 ஏக்கர் அவர்களுடைய கைகளில் இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், மக்களுக்குத் தேவையில்லாத அரசாங்கக்காணிகளை தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்கு பிரதேச செயலாளர்களும், அரசாங்க அதிகாரிகளும் அனுமதித்ததின் பேரில் இராணுவ முகாம்களையும், அதனையண்டிய பிரதேசங்களையும் வைத்திருப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கிறது.

ஆனால் எது எது மக்களுக்கு முக்கியமாகத் தேவையாக இருந்ததோ, அல்லது அரசாங்கத்திற்குத் தேவையானதாக இருந்ததோ அவ்வாறான காணிகள் அடையாளம் காணப்பட்டுக்கின்றன. அவ்வாறான காணிகளுக்கு மாற்றீடான காணிகளைக் கொடுத்தபின் அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் அந்தக் காணிகளை மாற்றம் செய்யும் பொழுது கட்டங்களைக் கட்டுவதற்கு பொருள் வசதி தேவையாக இருக்கின்றது. அவ்வாறான தாமதங்கள் இருப்பதனால் சில இடங்களில் 6 மாதங்களுக்குள் விடுவிப்பதற்கும் சில இடங்களில் ஒருவருட காலத்துக்குள் விடுவிப்பதற்கும் அவர்கள் இணங்கியிருக்கிறார்கள்.

காணி விடுவித்தல் சம்பந்தமாக பலர் பல கேள்விகளைக் கெட்டுக்கொண்டிருக்கிறாரக்ள. இப்பொழுது அரசாங்கத் தரப்பில் காணி விடுவிப்பு சம்பந்தமாக ஜனாதிபதியின் செயலாளரின், பிரதம மந்திரியின் செயலாளர் உட்பட ஒரு குழு ஒன்று அதற்காக வேலை செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டம் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்படும். இந்தத் இந்த இடங்களில் காணிகள் இராணுவம் உட்பட பாதுகாப்புப் படை பொலிஸ் படைகளின் இருப்பதனை அடையாளம் கண்டு அவற்றில் எவை இலகுவாக விடுவிக்கக் கூடியதாக இருக்கின்றதோ அதை விடுவிப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் கடந்த 5 மாதங்களுக்குள் அண்ணளவாக ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக இராணுவத்தளபதி மகேஸ் அவர்களைக் குறிப்பிட வேண்டும். அவரது வழிநடத்தலின் கீழ் தொடர்ச்சியாக காணிகள் விடுவிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. இராணுவத்தினரின் வசம் இருந்த அண்ணளவாக 77- 79 வீதமான காணிகள் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 23 வீதமான காணிகள் மேலும் விடுவிக்கப்பட வேண்டியிருக்கின்றன.

இராணுவம் பொலிஸ் படை உட்பட சகலரும், பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு வேறு ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டம் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வெண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதனால் தற்பொழுது இருப்பிடங்களை, அலுவலகங்களினை அமைப்பதற்கான பண உதவிகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. எங்களது அமைச்சு சுவாமிநாதன் தலைமையில் ஒவ்வொரு வாரத்திலும் கலந்துரையாடி இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளையுமு; வரவழைத்து இடங்களையும் தொடர்ச்சியாக விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளளோம்.

சில இடங்களில் காணி விடுவிக்கப்படாத இடங்களில் கூட மக்கள் அத்துமீறி குடியேறி வருகிறாரகள். அரசாங்கம் விடுவித்த பகுதிகளை விடுத்து அப்பகுதிகளில் குடியேறும் பொழுது நிலக்கண்ணிவெடி போன்ற பாதுகாப்புப்பிரச்சினைகள் இருப்பதனால் அரசாங்கம் என்ற வகையில் அந்த மக்களுக்கு உதவி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. அவ்வாறான இடங்களுக்கு மிகவும் கவனமான வகையில் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளுடன் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு முடிந்த வரையில் மீண்டும் அந்தக் காணிகளை மீட்டுக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுது;துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: