28 May 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு அபாயம் ஆளுநரின் பங்கேற்புடன் அவசிய கலந்துரையாடல்

SHARE

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகள் டெங்குத் தாக்கம் அதிகரித்துள்ள பிரிவுகளாக பதிவாகியுள்ள நிலையில் இது விடயமாக கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் அவசிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், ஏறாவூர் நகரம், கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகள் மாதாந்தம் டெங்குத் தாக்கம் அதிகரித்து வரும்  இடங்களாகப் பதிவாகியுள்ளன.


இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய ஈரலிப்புக் காலநிலையில் டெங்கு நுளம்புத் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர மற்றும் அவசிய வேலைத்திட்டங்களை ஆராய்வதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் பிரசன்னத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்சமயம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் சுகாதாரத் திணைக்களத்தினாலும் உள்ளுராட்சி மன்றங்களினாலும் முன்னெடுத்து வரப்படுகின்ற போதும் இன்னமும் உத்வேகத்துடன் செயலாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே மாதத்தில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் உயர் தரம் கற்றுக் கொண்டிருந்த மகளும், பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் சகோதரரும் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பயனின்ற்p உயிர் துறந்திருந்தனர் என்றும் அதிகாரிகள் தெரவித்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: