மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் புதன்கிழமை இடம்பெற்றன.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இறைவழிபாடு, சிற்றூண்டிகள் வழங்கல், கைவிசேடம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விளையாட்டு நிகழ்ச்சிகளில் தரம் 1, 2 மாணவர்கள் பங்கேற்றதுடன், யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரும் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment