கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எல்லைப் புறப் பிரதேசமான குடும்பிமலை (தொப்பிகல) கிராமத்தில் சனிக்கிழமை 07.04.2018 “பயணாளிகளுக்காக ஒரு நாள்" என்ற செயற்திட்டத்தின் கீழ் ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தொண்டர்களினால் சிரமதானமும் களப் பயணமும் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கில் 2008 ஆம் ஆண்டு கடைசியாக தொப்பிகல பிரதேசம் விடுவிக்கப்பட்ட பின்னர் அந்தப் பகுதி மக்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேறிய நிலையில் தற்போது அங்கு வாழ்வாதாரம் மற்றும் சமூக நலப் பணிகளில் அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அவ்வப்போது உதவு ஊக்குவிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் பிரதேசத்தில் ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளையும் கொட்டில்களையும் கிராம மக்களுக்கு வழங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment