மட்டக்களப்பில் இம்முறை சித்திரைப் புத்தாண்டுக்கான மாபெரும் விளையாட்டு விழாவொன்றினை நடாத்த ஏற்ற ஒழுங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 21.04.2018ம் திகதி காலையில் இருந்து மாலை வரை கூழாவடி டிஸ்கோ மைதானத்தில் இந்த ஆர்வமூட்டும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், மைதான விளையாட்டுக்கள், தமிழர் கலாச்சாரத்தைப் பிரதி பலிக்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் உள தெம்பூட்டும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவதோடு கண்டுகளிக்குமாறும் சனிமவுண்ட் விளையாட்டுக்கழகத்தினர் அழைக்கின்றனர்.
இதுபற்றி அறிய விரும்புவோர் சனிமவுண்ட் விளையாட்டுக் கழகத்தின் விக்கினபிரதாப் -0773602218 மற்றும் நமசிவாயம் - 0779795479 ஆகியோரோடு தொடர்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment