11 Apr 2018

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வவுணதீவில் பலகாரச் சந்தை

SHARE
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பலகாரச் சந்தை புதன்கிழமை காலை (11ஆம் திகதி) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பலகாரவகைகள், முறுக்கு வகைகள், தட்டை வடை, அரியதரம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ.தனுசியாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், நிருவாக உத்தியோகத்தர் ஜெ.ஜெயந்திரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ரி.சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 



SHARE

Author: verified_user

0 Comments: