22 Apr 2018

மாணவர்களின் கல்வியிலும், சமூகத்திலும் அக்கறை கொண்டதாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் செயற்பட்டு வருகின்றது – அரசாங்க அதிபர்.

SHARE
மாணவர்களின் கல்வியிலும், சமூகத்தி அக்கறை கொண்டதாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ர் ஆலயம் செயற்பட்டு வருகின்றது. என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்iளாயார் ஆலயத்தினால் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசழிப்பும், பாராட்டு விழாவும் சனிக்கிழமை (21) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்iளார் ஆலய பரிபாலன சபைத் தலைவர் கா.வ.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், வலயக் கல்விப் பணிப்பாளர்களான க.பாஸ்கரன், ஆர்.சுகிர்தராஜன், ரி.ரவி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதேச சபை உறுப்பினர்களான மு.தேவதாஸன், திருமதி.நிவேதிதா சந்திரலிங்கம், மற்றும், கிராம மட்ட பொது  அமைப்புக்கள், பொதுமக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலுள்ள பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, ஆகிய 4 கல்வி வலயங்களிலுமிருந்து 2014 ஆம் ஆண்டு தொடக்கம், 2016 ஆம் ஆண்டுவரை வலய மட்டங்களில் முதல் மூன்று இடங்களையும் பெற்று பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கும், கல்விப் பொதுத்தர சாராதண தரம், மற்றும்,  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, ஆகியவற்றிலும் சாதனை படைத்த மாணவர்களுக்குமாக மொத்தம் 233 மாணவர்களுக்கு இதன்போது நினைவுச் சின்னங்களும். காசோலைகளும், வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்….

களுவாளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றியதாக இந்த மாவட்டத்திலுள் ஏனைய ஆலயங்களும் சமூகப் பணி செய்ய முன்வர வேண்டும். கடந்த காலங்களில் ஆலயங்களும். மடங்களும், எமது கலைகளையும், கலாசாரங்களையும், கல்வியையும், கட்டிக்காத்து வந்திருக்கின்றன. அவை இடையில் ஏற்பட்ட நொய்தல் காரணமாக இடம்பெறவில்லை. எனினும் தற்காலத்தில் களுதாவளைப் பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்கள் இவ்வாறு கல்விக்காகச் செயற்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். 

இதபோன்று  ஏனைய துறைகளிலிருக்கின்றவர்களையும் நாங்கள் பாராட்டிக் கௌரவிக்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. இவ்வருடம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் எமது மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் கலந்து கொண்டிருக்கின்றார். இவ்வாறு விளையாட்டு, கலை, உள்ளிட்ட பல விடையங்களிலும் திகழ்கின்ற அனைத்து மாணவ மாணவிகளையும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கின்ற தேவை எமக்குள்ளது.  பல்கலைக் கழங்கங்களுக்கு சொற்ப புள்ளிகள் வித்தியாசத்தில் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கும் வேறு செயற்றிட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது. 

இவற்றுக்காக வேண்டி தனி ஆலயங்கள் மாத்திரமோ, அல்லது, ஒரு குறிப்பிட்டவர்கள் மாத்திரமோ செயற்பட்டால் அது முழுமை பெறாது, சமூக்தின்பால் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செற்பட்டால் எமது பிரதேசத்தையும், நாட்டையும் நாங்கள் வளப்படுத்த முடியும்.  

இன்று பாராட்டப்படும் மாணவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு ஏனைய மாணவர்களை ஊக்கப்டுத்தி தங்களைப்போல் கல்வியில் மிளிர்வதற்கு உந்துசக்தியளித்தால் அது எதிர்கால்தில் நமது பிரதேசங்களில் கல்வியில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என அவர் இதன்போது தெரிவித்தார்.































SHARE

Author: verified_user

0 Comments: