மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோரினை பாதுகாக்கும் வகையில் வர்த்தக நிலையங்களில் உள்ள நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில் திங்கட்கிழமை 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
09ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரை 04 நாட்கள் இப் பிரதேசத்தில், நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வர்த்தக நிலையங்களில் முத்திரையிடப்படாத தராசுகள் பாவனைக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் வருடாந்தம் இந்த முத்திரையிடும் பணிகளை திணைக்களம் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வருடந்தோறும் தராசுகள் மற்றும் அளவை பொறுட்களுக்கு முத்திரையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும் சில வர்த்தக நிலையங்கள் இவற்றினை கருத்தில்கொள்ளாமல் பொதுமக்களையும் நுகர்வோரையும் சுரண்டும் செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றன.
இவ்வாறு செயற்பட்டுவரும் வர்த்தக நிலையங்களை கண்டுபிடித்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தயங்காது. எனவும் மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment