நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடைந்ததன் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசுக்கு தற்போது இரண்டாவது வாய்ப்புக் கிடைத்துள்ளது என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வமத பேரவை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் செயலமர்வில் கலந்து கொண்டு அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
ஹபறணை விலேஜ் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை 08.04.2018 இந்த செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜெஹான் பெரேரா,
2015ஆம் ஆண்டு குறிப்பிட்ட ஒரு சில பணிகளை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த நலலாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறியது.
ஆனால் 2015ஆம் ஆண்டு தொடக்கம் அந்தப் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வந்துள்ளதோடு அரசாங்கம் பின்வாங்கும் நிலையும் காணப்பட்டது.
அதற்கான காரணம் நல்லாட்சி அரசாங்கத்திற்குள்ளே காணப்பட்ட பிளவாகும்.
நலடலாட்சியிலுள்ள இரண்டு கட்சிகளுக்கிடையிலும் பிளவு காணப்படுகின்ற அதேவேளை, தற்போது மக்களுக்கு மத்தியிலும் பிளவு காணப்படுகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதம மந்திரி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினர் வலுவடைந்துள்ளனர். ஐதேக அந்தக் குழுவினர்தான் பொருளாதாரத்திலும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் முன்னணியில் இருக்கும் குழுவிராகும்.
ஆகவே அதுவொரு நல்ல சகுனமாகத்தான் எனக்குப் படுகின்றது.
2015இல் நாட்டு மக்களிடையே சிறுபான்மை பெரும்பான்மை மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டிருந்தது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது சிறுபான்மைக் கட்சிப் பிரதிநிதிகளும் ஐகே பிரதிநிதிகளும் இணைந்து வாக்களித்திருந்தார்கள்.
உயர்மட்டத்தில் காணப்பட்ட அந்த ஐக்கியம் மக்கள் மத்தியில் காணப்படவில்லை.
ஒட்டுமொத்த இலங்கையிலுமுள்ள பிரச்சினை அதுதான்.
இலங்கை பன்முகத்தன்மை கொண்ட நாடு .
இலங்கையில் இனங்களுக்கிடையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றிருக்க முடியாது.
முதலாந்தரப் பிரஜைகள் என்று ஒரு சாரார் இருக்க இரண்டாந்தபை; பிரஜைகளாக ஒரு சிலர் இருக்க முடியாது.
எல்லோரும் சமமானவர்வள் அவர்கள் ஒரே விதத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் நாட்டிலே பதற்ற நிலைமை காணப்படுகின்றது.
இலங்கை என்பது ஒரு தாய் மக்கள் நிறைந்த குடும்பம் போன்றது. சமயப் போதனைகளும் அவைதான். இவ்வாறேதான் நாடும் உலகும் நிருவகிக்கப்;பட வேண்டும். ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை.
பல்லினத் தன்மையில் சம அந்தஸ்து வழங்கப்படாவிட்டால் எமது நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அம்பாறை கண்டி சம்பவங்கள் இதனைத்தன் நமக்குணர்த்தி நிற்கின்றன.
பெரும்பான்மை இன மக்களுக்கு எதிராக எதனையும் செயயக் கூடாது என்ற அச்சம் அரசுக்கு இருந்தது.
கண்டி சிவில் சமூகம் வலிமை அதிகாரம் இல்லாத சந்தர்ப்பத்திலும் குறியீட்டு ரீதியிலான வல்லமையை வைத்துக் கொண்டு கலவர நேரத்தில் அவர்கள் செயற்பட்டார்கள்.
இங்கு நடந்தது தவறு என்று அவர்கள் ஊடக மாநாட்டில் வெளிப்படையாக எடுத்துச் சொன்னார்கள்.
மக்கள் உண்மைணைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்று கண்டியில் கோரி நின்றார்கள்.
அதேபோல நாட்டிலுள்;ள ஏனைய சிவில் சமூகங்களும் இதனைச் செய்ய வேண்டும். வன்முறைக்கு தயாரில்லை சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
திருகோணமலை மட்டக்களப்பிலும் இனப்பிரச்சினைகள் உள்ளன.
இந்த நிகழ்சிசித் திட்டங்களுக்கூடாக சிவில் சமூகம் எங்கும் செயற்பட வேண்டும்.
தனியாகச் சிந்திக்காமல் சிவில் சமூகமாகச் சேர்ந்து சிந்திக்க வேண்டும். ஆண் பெண், சமூகம் என்று சிந்தினை பரஸ்பர உரையாடலுக்குச் செல்ல வேண்டும்.
இலங்கையில் பரஸ்பர உறவுமில்லை கலந்துரையாடலுமில்லை.
சிவில் சமூகம் தயாராக இருந்தால் அரசை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தூண்டலாம்.” என்றார்.
0 Comments:
Post a Comment