28 Mar 2018

கிராமங்களை ஆக்கிரமிக்கும் இளமையில் வறுமையும் அதை எதிர்த்து போஷாக்கு உணவு வழங்குதலும்.

SHARE
கல்வி இன்று கிராமப்புறங்களில் வாழும் தமிழ் மக்களிடையே காணப்படும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. சாண் ஏறமுழம் சறுக்கும் கதையாக இவ்வர்களுடைய கல்வி போஷாக்குமட்டம் முன்னேற்றம் காணவில்லை, பெற்றோரின் வேலையின்மை, குறைந்த வருமானம், விழிப்புணர்வு இல்லாமை, சமுகத்தின் குறைந்தளவான பங்களிப்பு போன்ற இன்னோரன்ன காரணங்களினால் எதிர்காலச் சந்ததிகள் இன்னும் பலவருடங்கள் ஏனைய சமுகத்துடன் ஒப்பிடும் பொழுது பின்னடைந்து சென்று கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு பலவேலைத் திட்டங்களை பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் மிகப்பின் தங்கிய பாலர் பாடசாலைகளை அடையாளங் கண்டு அவர்களுக்கான போஷாக்கான உணவு வழங்குதல், சேவை வழங்குனர்களை ஒருமுகப்படுத்துதல், விஷேடத்துவம் உள்ளவர்களைக் கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற பல உதவிகளை கிழக்கிலங்கை இந்து சமயசமுக அபிவிருத்திச் சபையினர் நிக்கன் நெல்வி பௌண்டேஷனின் நிதிஉதவியுடன் செய்துவருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இச்செயற்பாட்டின் மூன்றாவது பாலர் பாடசாலை மண்டூர் ஒல்லிமடுவால் கிராமத்தில் பாலர் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அதற்கான போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்வு 25.03.2018 அன்றுகிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்திய அத்தியட்சர் கு.சுகுணண், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் உதவிப்பணிப்பாளராக உள்ள சி.தணிகசீலன், அக்கிராமத்துக்கான கிராமசேவை உத்தியோகத்தர் க.மயூரன், சமுகசேவைப் பிரிவின் பதவி நிலை உத்தியோகத்தர் மு.பேரின்பராசா, கி.அ.சசெயலாளர் ம.கலாவதி போரதீவுப்பற்று பிரதேச சபையின் அங்கத்தவர்களான  திருக்குமரன், ஜெயரெட்ணம், தயாளினி, மற்றுமு; அசிரியர்கள், பெற்றோர்கள் மாவணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அமைப்பின் தலைவர் த.துஷ்யந்தன் கருத்து தெரிவிக்கையில்… எமது சபை ஏற்றத்தாழ்வுக்கு அப்பால் சென்று தேவையுடைய மக்களை அடையாளங் கண்டு பல்வேறுவிதமான சேவைகளை ஆற்றி வருகின்றது. இச்சேவைகள் அனைத்தும் சமுக சிவில் அமைப்புக்கள், விளையாட்டுக்களகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், நலன்விரும்பிகள் அத்துடன் அரச திணைக்கள அதிகாரிகள் ஆகியோர்களை ஒருங்கிணைத்த வண்ணம் நல்ல பல சேவைகளை மக்களிடையே செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் ஒருகட்டமாக மண்டூர் பகுதியின் எல்லையில் அமைந்துள்ள ஒல்லிமடுக் கிராமத்திலுள்ள இந்தபாலர் பாடசாலையில் போஷாக்கு உணவு வளங்கும் திட்டமானது நிக் அண்ட் நெல்லி பௌண்டேஷன் நிதியுதவியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தவேலைத்திட்டம் வெற்றிகரமாக அமைய அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார். 

ஒரு சமுகத்தின் எல்லாவித முன்னேற்றத்துக்கும் கல்வியே அடிப்படையாகும். கல்வி கற்றதனால்தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடியுள்ளோம். அந்த வாய்ப்பை நாம் நமது பிள்ளைகளுக்கு கொடுக்க தவறக்கூடாது. அந்தக் கல்வியை பெறுவதற்கு நல்ல ஆரோக்கியம் தேவை அந்த ஆரோக்கியத்துக்கான அடிக்கல் இடும் பணியினையே இந்த சபையினர் நிக் அண்ட் நெல்லியுடன் இணைந்து போஷாக்கு உணவு வழங்கும் திட்டமாகச் செய்து சேவையாற்றி வருகின்றமை காலத்தின் தேவை அறிந்த செயலாகும். 

நம்மைச் சுற்றி நமக்கு தேவையான அத்தனை உணவு வகைகளும் உள்ளன, குறிப்பாக தானிய வகைகள், மீன்வகைகள், நல்லமரக்கறி வகைகள், மற்றும் பசும்பால் ஆகியவை கிடைக்கின்றன. அவைதான் நிறைவானவை அவற்றை விடுத்து வெறும் வெளிக்கவர்சியில் மயங்கி நாம் பொதி செய்த பாதுகாப்பற்ற போஷாக்கு குறைந்த உணவு வகைகளை உண்டு எம்மையே நாம் கெடுத்துக் கொள்ளுகின்றோம். அதற்குமாறாக இந்த மாணவச் செல்வங்களுக்கு நல்ல எமது பகுதியில் இருந்து கிடைக்கும் தானிய, பால், முட்டை போன்ற உணவுகளை இந்தக் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக இந்த திட்டத்தினை ஆரம்பித்து இருப்பதுபாராட்டுக்குரியது. என இதன்போது கலந்து கொண்ட வைத்திய அத்தியட்ஷகர் கு.சுகுணண் தெரிவித்தர்.

இந்நிலையில் இதன்போது உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் குறிப்பிடுகையில்….  சிவில் அமைப்புக்கள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றை மக்களின் அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புபடுத்த வேண்டும். அதுதான் நீண்டு நிலைத்திருக்கும் ஒரு செயற்பாடாக இருக்கும் அல்லாது செய்பவை சிறிது காலத்தில் மறைந்துபோகும் இலக்கினை எட்ட முடியாதவையாகவே அமையும். அந்த வகையில் பல சாராரினையும் ஒன்றிணைத்து இந்தச் சேவைமுன்னெடுக்கப்பட்டு வருவது எடுத்துக்காட்டாக உள்ளது. இதற்கு எமது புலத்தில் உள்ளவர்களின் தொடர்சியான கைகொடுப்பு எம்மை நெகிழச் செய்துள்ளது. எமது மக்களிடையே உறுதியான கல்விக்கான அடிக்கல்வியை பாலர் பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டுக் கிணங்கவே இந்த வேலைகளை இனங்கண்டு செய்துவருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.















SHARE

Author: verified_user

0 Comments: