சுவாமிவிவேகானந்தரின் 156 வது பிறந்ததினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்ததொழில் நுட்பவியல் கல்லூரியில் பயிற்சியினை பூர்த்திசெய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2018.03.22 ஆம் திகதி சமூகநலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு ஆத்மீக அதிதியா கமட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி பிரபு பிறேமானந்தாஜீ மகராஜ் அவர்களும் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்கஅதிபர் எம்.உதயகுமார் அவர்களும். அத்தோடு சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.தட்சணகௌரி தினேஸ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி.இ.ராகுலநாயகி அவர்களும், கௌரவ அதிதிகளாக சர்வதேச தொண்டு நிறுவனங்களின் திட்ட உத்தியோகத்தர்கள், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், தொழில்க் கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள், பெற்றோர், கல்லூரிபயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள் எனபலரும் கலந்துசிறப்பித்தனர்.
கல்லூரியின் செயற்பாடுகள்
ஆரம்பகாலத்தில் இலவச கணினிப் பயிற்சி பின்னர் தொழில் வாய்ப்புக்கான பயிற்சி, தற்போது தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள், வாழ்க்கைத் திறன் மேம்பாடு, உளவள ஆற்றுப்டுத்துகை போன்ற வற்றை உள்ளடக்கிய செயற்பாடுகளுடனான பயிற்சிகள்.
கல்லூரியின் பிரிவுகள்
தொழிப்பயிற்சி
தேசிய தொழில் தகைமை முறைமையினை பின்பற்றியும், தொழில்வளங்குனர்களின் தேவையினை கருத்தில் கொண்டும் தொழில் வாய்ப்பினை வழங்கக் கூடிய பயிற்சிகள். உயர் கல்வியனைத் தொடர்வதற்கான அடிப்படையான பயிற்சிகள்
மேலதிக திறனை விருத்திசெய்யும் பயிற்சிகள்
விவேகானந்த இளைஞர் அணி.
மாணவர்களின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ற வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளல் இளைஞர்களின் மேலதிக தேவைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
விவேகாஆலோசனைமையம்.
தொழில் வழிகாட்டல் மற்றும் வாழ்க்கைத் தேர்ச்சி, உள ஆற்றுப்படுத்துகை உள்ளடங்கலாக இளைஞர்களைதயார்ப்படுத்தும் செயற்பாடுகள்
விழிப்புணர்வு கருத்தரங்கு
பயிற்சிப் பட்டறைகள்
பயிற்சிகள்
பிரயோகஆங்கிலமொழிகற்றல் பிரிவு
ஆங்கில மொழியினை முறையான விதத்தில் கற்பித்து அவர்களின் மொழி விருத்தியினை வளர்த்தல் ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள், வளவாளர்களை உருவாக்கும் விதமானபயிற்சினை மேற்கொள்ளல்,
வருமானம் ஈட்டல் பிரிவு
கல்லூரியின் பேண்தகு நிலையினைகருத்தில் கொண்டு வருமானம் ஈட்டுவதற்கான சில தொழில்நுட்ப சேவைகளை ஆரம்பித்தல் கணினி பழுதுபார்த்தல், புகைப்பட எடிற்றிங்,தட்டச்சு,
சுவாமிஆத்மீகஉரை
இந்தகல்லூரி இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொள்வது சுவாமி விவேகானந்தர் எதைசெய்ய வேண்டும் என்றாரோ அதையே இவர்கள் செய்வாதாக தோன்றுகின்றது.
அரசாங்கஅதிபர் உரை
மட்டக்களப்பு மாவட்டம் கல்வி வளர்ச்சியல் 24 வது இடத்தில் உள்ளது. இவற்றினை நிபர்த்தி செய்வதற்காக இவ்வாறான தொழில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு சிறப்பானது.
இக் கல்லூரியின் செயற்பாடுகளின் ஒன்று பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது. இது தற்போதைய காலத்தில் மிகவும் தேவையானது
இளைஞர்கள் பலர் பயிற்சிகளை ஒருநேக்குடன் செய்வதுகிடையாது, அவர்கள் பல்வேறுபட்ட பயிற்சிகளை மேற்கொள்கின்றனரே தவிரகுறிபிட்ட துறையினை தேர்ந்தெடுத்து அதன் மூலம் தொழிலினை பெறுவது குறைவாக காணப்படுகின்றது.
துற்போதைய நிலமையில் அரச தொழில்களை நம்பியிராது தனியார் துறையில் தொழிலினை பெறல் அல்லது சுயதொழிலினை ஆரம்பித்தல் போன்வையே எமது மாவட்டத்தின் பொருளாதாரத்தினை உயர்த்தும்.
சான்றிதழ்கள்
தேசிய தொழில்சார் தகைமைசான்றிதழ் மொத்தமாக89 (ILO நிறுவனநிதிஉதவி மூலமாக 40 WUSC நிறுவனநிதிஉதவி மூலமாக 16,வெளிநாட்டுபுலம்பெயர் உறவுகளின் உதவி மூலமாக 18,பயிலுனர்கள் பங்களிப்புடன் 15)
பதிவுசெய்யப்ட்டகல்லூரியின் குறுகியகாலபயிற்சிசான்றிதழ் 69
உடைகள் அன்பளிப்பு 20 வயோதிபர்கள்
இணையத்தள பக்கம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. www.vcot.lk
கல்லூரியில் சேவையாற்றியபணியாளர்களைகௌரவித்தல் நிகழ்வும் நடைபெற்றது
0 Comments:
Post a Comment