மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், வந்தாறுமூலை மற்றும் கரடியனாறு ஆகிய கமநல சேவைப் பிரிவுகளில் உள்ளடங்கும் விவசாயக் கண்டங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு மானாவாரிச் (வான்மழையை எதிர்பார்த்த நெற்செய்கை) செய்கையின் போது வற(ர)ட்சினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ;ட ஈடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி வியாழக்கிழமை தொடக்கம் 29.03.2018 ஏறாவூர், வந்தாறுமூலை மற்றும் கரடியனாறு ஆகிய கமநல சேவை நிலையங்களில் விவசாயிகள் தமக்கான இழப்பீட்டு விண்ணப்படிவங்களைப் பெற்று அவற்றைப் பூர்த்தி செய்து மிக விரைவாக திருப்பி ஒப்படைக்க வேண்டும் என ஏறாவூர் மற்றும் வந்தாறுமூலை கமநல சேவை நிலையங்களுக்குப் பொறுப்பான பெரும்பாக உத்தியோகத்தர் ஐ. பதுர்தீன் தெரிவித்தார்.
இழப்பீட்டைக் கோரும் விவசாயிகள் தமது இலவச உரமானிய ஆவணத்தைக் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தாமதிக்காமல் விவசாயிகள் தமது இழப்பீட்டுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
0 Comments:
Post a Comment