29 Mar 2018

வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது எனது கடமைப்பாடு – ஜயேந்திரராசா.

SHARE
வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது எனது கடமைப்பாடு, எமது வட்டாரத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நிறைவேற்ற பிர தேச சபை அங்கத்துவத்தை சிறந்த முறையில் பயற்படுத்துவேன். என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு விகிதாசார பட்டியல் மூலம் ஸ்ரீ லங்கா சுதந்திரகட் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டைக்கல்லாறு வட்டாரத்தைச் சேர்ந்த தம்பியப்பா ஜயேந்திரராசா தெரிவித்துள்ளார்.
பிரதேச சபைக்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வியாழக் கிழமை (29) வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள 9 ஆம் வட்டாரமான கோட்டைக்கல்லாறு கிராமத்தில் நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டேன். ஆனால் நான் வாக்கெடுப்பின்போது தெரிவு செய்யப்படவில்லை. இருந்த போதிலும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள 3 உள்ளுராட்சி மன்றங்களிலும் எமது கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் நான்தான் எனதுகட்சி சார்பாக அதிகூடிய 618 வாக்குகளைப் பெற்றுள்ளேன். இவற்றைக் கருத்தில் கொண்டு எமது கட்சிக்கு இப்பிரதேசத்திற்குக் கிடைத்த விகிதாசார அங்கத்துவத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற நான் ஓர் அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

எமது வட்டாரத்திலுள்ள மக்கள் எனக்கு அதிகூடிய வாக்குகளை வழங்கியதாலே தற்போது நான் விகிதாசார அடிப்படையிலாவது பிரதேச சபைக்கு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனவே எனக்கு வாக்களித்த எனது வட்டார மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஓர் அங்கத்தவராக இருந்து எனது வட்டாரத்தில் காணப்படுகின்ற தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இவற்றினை விட தேசிய அரசாங்கத்தில் ஆளும் கட்சியாகவுள்ள எமது கட்சியின் முக்கியஸ்த்தர்களையும், அமைச்சர்களையும் அழைத்து வந்து இப்பிரதேசத்தின் அபிவிருத்தினை முன்நோக்கிக் கொண்டு செல்ல எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: