மகளீர்கள் பல்வேறு தரப்பிலும் மையமாக இருந்து செயற்படுகின்றவர்கள் - மட்டு.மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி.
மகளீர்கள் பல்வேறு தரப்பிலும் மையமாக இருந்து செயற்படுகின்றவர்கள், தீர்மானமெடுத்தல், சிறப்பான முறையில் ஒழுங்கமைத்தல், பொறுப்புக்களைச் சரிவரச் செய்தல் போன்ற பல விடையங்களும் அவர்களுக்கு ஒரு கைவந்த கலையாகவே அவை மிளிர்கின்றன.
என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு வியாழக்கிழமை (08) மாலை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மகளிர் தினம் சர்வதேச தரத்தில் நடைபெற்றுள்ளதையிட்டு அகமகிழ்கின்றேன். அந்த வகையில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி, வீதிநாடகம், மகளீருடனான நேர்காணலகள், மகளிருக்கான விளையாட்டுக்கள், போன்ற பல அம்சங்களையும், உள்ளடக்கி இந்நிகழ்வு நடைபெற்றமையால் மிகவும் பெருமிதம் அடையக்கூடியதாகவுள்ளது.
இந்நிகழ்வின்போது சர்வதேச மகளிர் தினத்தின் அம்சங்கள் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் அனைத்தும் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் கட்டுக்கோப்பான முறையில் இயங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. அது அபபிரதேச மாதர்கள் அபிவிருத்தியில் மிளிர்வதையும் காணமுடிகின்றது.
மகளீர்கள் பல்வேறு தரப்பிலும் மையமாக இருந்து செயற்படுகின்றவர்கள், தீர்மானமெடுத்தல், சிறப்பான முறையில் ஒழுங்கமைத்தல், பொறுப்புக்களளைச் சரிவரசந் செய்தல் போன்ற பல விடையங்களும் அவர்களுக்கு ஒரு கைவந்த கலையாகவே அது மிளிர்கின்றன.
ஒரு குடும்பத்தை நடாத்துவதென்பது எவ்வாறு எப்பதை மகளிர் ஒவ்வொருவருக்கும் தெரிந்த விடையம், அதனை மிகவும் லவகமாக பல வேலைகளுக்கு மத்தியிலும், இலுகுவான முறையில் சிந்த முகாமைத்துவத்தைக் காட்டுபவர்கள் பிராதேசத்திலும், மாவட்டத்திலும், நாட்டிலும் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
மகளிர், சுதந்திரமாகச் செயற்படுபவர்கள், தன்னார்வமாகச் செயற்படுபவர்கள், மிகவும் சுறுசுறுப்பாகச் செயற்படுபவர்கள், என்பவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு அனைத்து மகளீரும் செயட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment