மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 தினங்களான தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் தமது அன்றாட கடமைகளை மேற்கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழையுடன் சேர்த்து காற்றும் வீசுவதனால் போக்குவரத்துச் செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
குளங்களில் குறைந்தளவான நீர்மட்டம் காணப்பட்ட போதிலும் தற்போது சிறிய குளங்கள் அனைத்தும் நிரம்பிப் காணப்படுகின்றன.
அந்த வகையில் வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், பெரியபோரதீவு, பழுகாமம், களுதாவளை, களுவாஞ்சிகுடி போன்ற பல இடங்களில் காணப்படும் குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து நிரம்பிக் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இவற்றினை விட கிராமங்களிலுள்ள உள் வீதிகளில் மழை நீர் தேங்கிக் கிடப்பதனால் கிராம வாசிகள் உள்ளுர் போக்குவரத்துச் செய்வதிலும் மிகுந்த கஸ்ட்டங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment