ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பலாச்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 21 வயதான இளைஞனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.03.2018 மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாச்சோலை முதலாவது குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் நிமலேந்திரன் பிரசாந்த் (வயது 21) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.
கூலித் தொழிலாளியான இவர் பெற்றோருடனும் சகோதரர்களுடனும் ஒரு வீட்டில் ஒன்றாகவே வசித்து வந்த நிலையில் அவ்வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பகல் வேளைக்குப் பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டின் அறைக் கதவு திறக்கப்படாமலே தாழ்ப்பாள் இடப்பட்ட நிலையில் பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் கொண்டு அறையைத் திறந்து பார்த்தபோது இவர் சடலமாகக் கிடப்பது தெரியவரவே பொலிஸாருக்கு அறிவித்து சடலம் மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் உடற் கூறாய்வுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment