மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை (19) பிற்பகல் 2.30 மணியளவில் மேற்படி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞ.சிறிநேசன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில்ல பட்டிருப்பு வலயக் கல்விப் பயிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜி.தில்லைநாதன், மற்றும் கல்வியியலாளர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலை மாணவர்கள், மற்றும் ஆசரியர்களை பாரதி இல்லம் (சிவப்பு), விபுலானந்தர் இல்லம் (பச்சை), நவலர் இல்லம் (நீலம்) என மூன்றாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
பாரதி இல்லம்(சிவப்பு) 520 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், விபுலானந்தர் இல்லம்(பச்சை) 515 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், நவலர் இல்லம்(நீலம்) 476 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இந்த இல்ல விளையாட்டுப் போடிட்டியில் மாணவர்கள் மாத்திரமின்றி ஆசிரிய, ஆசிரியைகளும், போட்டிகளில் பங்கு பற்றியிருந்தனர்.
இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக் கேடையங்கள் வழங்கப்பட்ட.
இவ்விளையாட்டு விழாவின் இறுதியில் தமிழர்களின் கலை, கலாசார, விழுமியங்களைப் பறைசாற்றும் வகையில் பாடசாலை மாணவர்களால், காவடி, பரதநாட்டியம், உள்ளிட்ட காலாசார நிகழ்வுகளும், மைதானத்தில் அரங்கேற்றியமை விசேட அம்சமாகும்.
0 Comments:
Post a Comment