மட்டக்களப்பு சந்திவெளியில் ஞாயிற்றுக்கிழமை 25.02.2018 இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதியிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை எதிர் திசையிலிருந்து வந்த டிப்பர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
ஆரையம்பதி விபுலானந்தா வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ். சஞ்சேகுமார் உயிரிழந்ததுடன் 21 வயதுடைய எஸ். சதீஸ்குமார் படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள பாதசாரி வெள்ளைக் கோட்டுக் கடவையில் பாதசாரிகள் கடப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மஞ்சள் நிற டிப்பர் வாகனம் எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தானர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment