இளம் சமாதான கட்டமைப்பாளர்களுக்கான ஒரு தளம்
இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு - 2018 நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான கருத்தாடல் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கட்புல மற்றும் அரங்கக் கலைகள் பல்கலைக்கழகம், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களின் கல்வி அமைச்சுக்கள் மற்றும் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் இணைந்து நடாத்தும், நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான கருத்தாடல் என்ற தலைப்பின் கீழ் இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு எதிர்வரும் ஏப்ரல், மாதம் 20 ஆம் , 21 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) மற்றும் , கட்புல அரங்க கலைகள் பல்கலைக்கழகம், கொழும்பு 07 (University of Visual and Performing Arts, Colombo 7)என்ற இடங்களில் முறையே நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அனைத்து சமயத்தை, இனக்குழுவைச் சேர்ந்த சுமார் 250 இகும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பங்குபற்றவுள்ளனர். இவர்களுக்கிடையே புரிந்துணர்வையும், சமானத்தையும் ஏற்படுத்தும் முகமாக மென்மையான விவாதம், உரையாடல்கள், பல ஊடாடும் அமர்வுகள், பட்டறைகள், கண்காட்சி மற்றும் கருத்துரைகள் என்பன ஏற்பாடு செய்யப்படுள்ளன.
இந்த விசேட அமர்வுகளானது நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் இளைஞர்களை உள்வாங்குதல், இளைஞர்களும் அகிம்சையும், இளைஞர்களும் சமூக மாற்றமும், சமூக அபிவிருத்தியில் இளைஞர்கள், தேசிய கலந்துரையாடலில் இளைஞர்களை உள்வாங்குதல், இளைஞர்கள் சமூக நீதி மற்றும் சமத்துவம், இளைஞர்கள் சமூக ஊடகம் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு, இளைஞர்களை உள்வாங்கிய சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசியக் கொள்கைமற்றும் நிலைமாறுகால நீதிச் செயன்முறை போன்ற கருப்பொருட்களில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இலங்கையில் புகழ்பெற்ற வளவாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்த விசேட அமர்வுகளை நடத்துவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்களிடையே உள்ள இடைவெளியைப் இணைப்பதற்;கும் சமாதானத்தை கட்டி எழுப்பும் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும் இதுவே ஒரு சிறந்த தருணம். இலங்கையிலுள்ள இளைஞர்களுள் 54.1 வீதமானோர் தங்களுடைய சொந்த சமயம் அல்லது இனக்குழு அல்லாத வேறு சமயத்தை அல்லது இனக்குழுவைச் சேர்ந்த நெருங்கிய நண்பர் ஒருவரைக் கொண்டிருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் (UNDP) வெளியிடப்பட்ட தேசிய மனித அபிவிருத்தி அறிக்கை (2014) வெளிப்படுத்துகின்றது.
இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை (2014) மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பிரேரணை (2250) ஐ உள்ளடக்கியே இம்மாநாட்டை நடாத்தப்படவுள்ளது. இந்த பிரேரணை ஆனது சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும் வன்முறையை இல்லாதொழிப்பதிலும் பிரதான அக்கறை கொண்டுள்ளோர் என்ற பரந்துபட்ட அங்கீகாரத்தை இளைஞர்களுக்கு வழங்குகின்றது.
இதன்போது சமாதானம் தொடர்பான கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர், தனிப்பட்ட ரீதியாகவும் , அல்லது அமைப்பு ரீதியாகவும், சுவாரஷியமான சமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டம் பற்றிய வெற்றிக் கதை ஒன்றைக் கொண்டிருந்தால், அல்லது இலங்கையின் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் மேம்படுத்துவதற்கான எந்தவொரு யோசனையும் கொண்டிருந்தால் 250 சொற்களில் குறுகிய சுருக்கத்தை NYS2018@LDJF.orgvdw என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்கவும். மேலதிக தகவகலுக்கு http://www.ldjf.org/youth-summit
or facebook/sdjfia பார்க்கவும். அல்லது மேலதிக தகவலுக்கு 0112053513 என்ற தொலைபேசிக்கு அழைத்து விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment