முனைக்காடு பாரதி படிப்பகத்தின் ஏற்பாட்டில், வானம்பாடி சஞ்சிகை வெளியீடும், சாதனையாளர்கள் கௌரவிப்பும், கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வும் சனிக்கிழமை (20) நடைபெற்றது.
படிப்பகத்தின் பணிப்பாளர் ந.சுவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், வானம்பாடி சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், இதன் முதற்பிரதியை முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.ப.மானாகப்போடி குருக்கள் பெற்றுக்கொண்டார்.
கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியீடு செய்யப்பட்ட இச்சஞ்சிகைக்கான நயவுரையை அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.நமசிவாயம் நிகழ்த்தினார்.
படிப்பகத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், படிப்பகத்தில் கல்வி பயின்று புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும், நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அதிபராகவிருந்து, சிறந்தசேவையாற்றிக் கொண்டிருக்கும் க.கிருபைராசா இதன்போது பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் தரம் 11 மாணவர்களுக்கான அடையாள அட்டையும் அறமுகம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்விற்கான வரவேற்புரையை பொ.திஜாந் வழங்கியிருந்ததுடன், நன்றியுரையை துளி அருவி அமைப்பின் செயலாளர் கு.செல்வராசா ஆற்றினார்.
நிகழ்வில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், பெற்றோர், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தவர்களும், இதன்போது நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment