மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் (ரீஎம்விபி) போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை சனிக்கிழமை அதிகாலை 20.01.2018 தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் பிள்ளையானின் (முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஆறாம் வட்டாரம் கருவேப்பங்கேணி-இருதயபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் அலுவலகத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முறைப்பாட்டினை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு பாதுகாப்பையும் வழங்கினர்.
0 Comments:
Post a Comment