12 Jan 2018

பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் உண்டியல் புதன் கிழமை (10) இரவு கள்வர்களால்…… உடைக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஆலய நிருவாம் தெரிவித்துள்ளது. இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..
பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் காவலாளி புதன் கிழமை இரவு 7.30 மணியளவில் உணவுக்காக வெளியே சென்றுள்ளார். மீண்டும் அவர் ஆலயத்திற்கு இரவு 8.30 மணியளவில் திருப்பி வந்து பார்த்தபோது ஆலயத்தின் முன்னால் வைக்கப்பட்டடிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். பின்னர் ஆலய நிருவாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் உண்டியலுக்காக 3 பூட்டுக்கள் போடப்பட்டிருந்தன, 3 பூட்டுக்களும் உடைக்கப்பட்டுள்ள நிலையில் உண்டியலிலிருந்த காசு எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை. உண்டியலிலிருந்த காசை எடுக்க முற்பட்ட கள்வர்கள் வெளியில் சென்ற காவலாளி ஆலயத்தினுள் வருவதை அவதானித்துள்ளார்கள், அப்போது செய்வதறியாது அப்படியோ விட்டு விட்டுச் சொற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக மேற்படி ஆலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களிலிருந்து இற்றவரை 3 தடவைகள் இவ்வாறு கள்வர்கள் இவ்வாலயத்தினுள் புகுந்து தங்களது கைவரிசையைக் காண்பிக்க முற்பட்டுள்ளனர். ஆளால் அம்பாளின் அருளினால் எந்ததொரு சந்தர்ப்பத்திலும் இதுவரை எதுவித களவுகளும் வெற்றியளிக்காமலிருப்பது அம்பாள் கண்கண்ட தெய்வம் என்பதை உணர்த்துவதாக பக்கதர்கள் தெரிவிக்கின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: