மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ளவர்கள் சகல துறைகளிலும் திறமையானவர்களாக இருக்கின்றனர். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா கடந்த வெள்ளிக்கிழமை(29) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது, அதில் தலைமையுரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர், அங்கு உரையாற்றுகையில்,…
இப்பிரதேசத்தில் திறமையுள்ள இளைஞர்கள் பலர் இலைமறைகாய்களாக இருக்கின்றனர். அவர்களையும் வெளியில் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கின்றது. சகல துறைகளிலும் சக்தி வாய்ந்த இளைஞர்கள் மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் இருக்கின்றனர். இதனை கடந்த காலங்களில் இவர்கள் வெளிகாட்டிய திறமைகளிலிருந்து அறியமுடியும். அனைவரும் ஒன்றிணைந்து குழுவாகச் செயற்படுவதன் மூலமாக பலவற்றினை சாதிக்க முடியும். இதனை செய்ய வேண்டும். இப்பிரதேசத்திலே உள்ள உள்ளுர் உற்பத்திகளை வெளியிலே கொண்டு செல்ல வேண்டும். என்றார்.
0 Comments:
Post a Comment